குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது யார்? இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களும் என்றும் அவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இலங்கையின் பல்வேறு பகுதியில் நேற்று நடத்திய தற்கொலை குண்டுத்தாக்குதலில் இதுவரை 290 உயிரிழந்ததுடன் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.