குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வடைந்துள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களிலும், கிங்ஸ்பெரி ஹோட்டல், சினமன் கிரான்ட் ஹோட்டல், சங்ரீ லா ஹோட்டல் ஆகியவற்றிலும், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ட்ரொபிக்கல் இன் ஹோட்டல் மற்றும் தெமட்டகொடை மஹவில கார்டன் ஆகிய 8இடங்களில் உயிர்த்த ஞாயிறன்று (21) குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.

இதில் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக உயர்வடைந்த நிலையில் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.