குறட்டையைக் கட்டுப்படுத்தும் மெத்தை!!

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது.

குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மெத்தை அதில் உறங்குபவர்களுக்கு இரவு முழுக்க நிம்மதியான உறக்கத்தை வழங்கும்.

இரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்து கொள்ளும்படி ஸ்மார்ட் மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இந்த ஆண்டிற்குள் தொடங்க உள்ளது.

அமெரிக்காவில் இதன் விலை 4000 டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,54,420 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.