குழந்தையின் விதைப்பைகளைத் துண்டித்த தாய்: இலங்கையில் அரங்கேறிய கொடூரம்

ஓட்டமாவடியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய தாயொருவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார்.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிச் சென்று குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.