குழந்தையைப் பார்த்துக்கொள்ள இத்தனை லட்சம் சம்பளமா?

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் நடிகர் சயீப் அலிகான் தம்பதிகளுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் உள்ளான்.

இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை நியமித்து உள்ளார்.

இதில் விசேஷம் என்னவென்றால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.

குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முக தேர்வு நடத்தியுள்ளார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் இதில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கடைசியாக ஒரு பெண்ணை தேர்வு செய்து உள்ளார்கள். ஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

கரீனா எங்கு போனாலும் குழந்தையோடு சேர்ந்து அந்த பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்கு போனாலும் கூட உடன் போகவேண்டும். இதற்காக சம்பளம் தவிர்த்து சிறப்பு அலவன்சும் நிறைய கொடுக்கிறார்.

படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கரீனா வீட்டுக்கு வந்ததும் அந்த பெண் அவரது வீட்டுக்கு செல்ல தனியாக காரும், டிரைவரும் ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்வளவு வசதி செய்துகொடுத்து இருப்பது ஆச்சரியமாக இருந்தாலும் கூட பிரபலங்கள் வீடுகளில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள் பலர்.