கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்!

கூகுள் அண்மையில் அறிமுகம் செய்த 2018 பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 11 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், இவற்றின் இந்திய விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

புதிய பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் கிளியர்லி வைட் மற்றும் ஜஸ்ட் பிளாக் என இரண்டு நிறங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதன் நாட் பின்க் நிறங்களின் விற்பனை இன்னும் தொடங்கவில்லை எனத் தெரிகிறது.

நவம்பர் 7ம் திகதிக்குள் புதிய பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தங்களது பழைய பிக்சல் அல்லது

நெக்சஸ் போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை இலவசமாக பெற முடியும்.

இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பிக்சல் 3 (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.71,000 என்றும், 128 ஜி.பி. பிக்சல் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.80,000 என்றும்,

பிக்சல் 3 XL (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.83,000 என்றும் 128 ஜி.பி. பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் விலை ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.