கையடக்க தொலைபேசி பயன்படுத்தாமல் சாப்பிட்டால் பீட்சா இலவசம்! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நிறுவனம்

கையடக்க தொலைபேசி பயன்படுத்தாமல் தங்கள் கடையில் சாப்பிட்டால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா இலவசமாக வழங்குவோம் என அமெரிக்கா நாட்டில் உள்ள பீட்சா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்பெரெஸ்னோ நகரில் உள்ளது கரி பிட்ஸா நிறுவனமே இதனை அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் பீட்சா சாப்பிட வருபவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்தாமல் சாப்பிட்டால் இலவசமாக பீட்சா வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் குழுவாக வந்தால் அந்தக் குழுவில் நான்கு பேராவதும் கையடக்க தொலைபேசி பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த பீட்சா கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் தங்கள் கையடக்க தொலைபேசியை கடை ஊழியர்களிடம் கொடுத்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட என்ற நோக்கத்தில் பீட்சா நிறுவனம் இத்தைகைய அறிவிப்பை வெளிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.