கொழுப்புக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த பெண்: மாற்றி அமைக்கப்பட்டிருந்த மூக்கு (படம்)

உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க பெண் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் குறித்த பெண்ணின் மூக்கு மாற்றியமைக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

மரிலா (வயது 41) என்ற பெண் 19 வயதில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்;

நான் என் குடும்பத்துடன் பெரு நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த போது உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தமையால் பலரும் என்னைக் கேலி செய்தனர்.

இதையடுத்து அங்குள்ள புகழ்பெற்ற மருத்துவரிடம் liposuction எனப்படும் உடலில் அதிக அளவில் உள்ள கொழுப்புகளை அகற்றுவதற்கு செய்யப்படுகிற அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தேன்.

சிகிச்சை முடிந்து கண்விழித்து கண்ணாடியை பார்த்த போது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் கொழுப்புகளை அகற்றும் சிகிச்சையுடன் சேர்ந்து என் மூக்கை மாற்றும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு மூக்கில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.

என் மூக்கு எப்போதும் அழகாக இருக்கும். ஆனால் இந்த சிகிச்சைக்கு பின் மிகவும் கோரமாக மாறியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.