கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தீ விபத்து! மர்மமாக உள்ள காரணம்

கொழும்பு- கொள்ளுப்பிடியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (12) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 12, 4 தீயணைப்பு வாகனங்களைக்கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மர்மமாக உள்ளதென கூறப்படுகின்றது.