கொழும்பில் குண்டுவெடிப்பு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்

கொழும்பில் குண்டுவெடிப்பில் ராதிகா சரத்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இலங்கையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது.

கடவுள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நான் தற்போது தான் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து கிளம்பினேன்.

அங்கும் குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், ராதிமா நல்ல வேளை நீங்கள் பிழைத்துக் கொண்டது என்று கூறி நிம்மதி அடைந்துள்ளனர்…