கொழும்பில் சற்று முன்னர் திடீர் தீப்பரவல்!

கொழும்பு – புறக்கோட்டை மெனிங் மார்க்கட் பகுதியில் திடீர் தீப்பரவல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெனிங் மார்க்கட் பகுதியின் கட்டடமொன்றில் இன்று முற்பகல் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அதேவேளை இந்த தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.