கொழும்பில் பட்டப்பகலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர்!

நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிய சம்பவம் ஒன்று புறக்கோட்டையில் இன்று அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் உள்ள தேசிய செயலாளர் சங்க அலுவலகத்திற்கு முன்னாள் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பத்தில் 62 வயதுடைய நபர் ஒருவரே தனக்கு தானே தீ மூட்டி கொண்டுள்ளார்.

தீயில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

இருந்த போதிலும் தீ மூட்டிக்கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை .

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.