கொழும்பில் பர்தா அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

கொழும்பில் பர்தா அணிந்து சென்ற நபர் மீது மக்கள் சரமாரியாக தாக்கியயுள்ளனர்.

வத்தளை – ஹெத்தளை பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஆண் ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறித்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும், அவரை பிடிக்க முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குழப்பம் விளைவிக்கும் குற்றவாளிகள் இவ்வாறான மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.