கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடும் என சந்தேகிக்கப்படும் மேலும் சில வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

5 மோட்டார் சைக்கிள்கள், கெப் வாகனம் மற்றும் வேனொன்று தொடர்பில் அதன் பதிவு இலக்கங்களுடன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.