கொழும்பு பேருந்தில் பயணிகளுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்திய சாரதி!

தனியார் பேருந்து ஒன்றை மது போதையில் ஓட்டிய சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா- கொழும்பு வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே மது போதையில் பேருந்தை செலுத்தியுள்ளார்.

கம்பஹா மேலதிக நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் குறித்த சாரதி இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை நீதவான் நிரந்தரமாக இரத்து செய்யுமாறு உத்தரவிட்டார். அவருக்கு 7500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் மிக மோசமான முறையில் பேருந்தை ஓட்டிய குறித்த சாரதியை, போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதன்போது சாரதி மது போதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.