கொழும்பு பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்!

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ போதை பொருள் தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 3 கிராம் 660 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.