கோடாரியால் வெட்டப்பட்ட குடும்பஸ்தர்: யாழில் அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் கோடாரி வெட்டுக்கு இலக்காகிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மந்துவில் கிழக்கைச் சேர்ந்த ந.கோபாலன் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு கைகலப்பாக மாறியதில், குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தரை தாக்கிய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.