கோர விபத்தில் பரிதாபமாக பலியான இரண்டு இலங்கை இளைஞர்கள்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலனறுவை மாவட்டத்தில் வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குற்பட்ட செவனபிடிய – பொறவௌ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி கால்வாயொன்றுக்குள் வீழ்ந்து நேற்று இரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் உடனடியாக வெலிகந்த வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.