கோலிக்கு பீட்டர்சன் புகழாரம்!-

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்று இங்கிலாந்து முன்னாள் பிரபல வீரர்கள் பீட்டர்சன், மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார்.

ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டிலும் (104 ரன்), நாக்பூரில் நடந்த 2-வது போட்டியிலும் (213) அவர் செஞ்சூரி அடித்து இருந்தார்.

இதன்மூலம் டெஸ்டில் தொடர்ச்சியாக 3 சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் கேப்டன் என்ற வரலாற்று பெருமையை விராட் கோலி பெற்றார்.

இந்த நிலையில் விராட் கோலியை உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் பிரபல வீரர்கள் பீட்டர்சன், மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பீட்டர்சன் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. அவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

தற்போதுள்ள வீரர்களில் அவர் முற்றிலும் மாறுபட்டவர். மற்றவர்களைவிட அவர் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.