கோல்ப் போட்டி: நடிகர் மாதவன் தேர்வு

தேசிய அளவிலான கோல்ப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் நடிகர் மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் தனது மகிழ்ச்சியினை மாதவன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கோப்பை கோல்ப் போட்டியின் தகுதிச் சுற்றில் மாதவன் பங்கேற்றார்.

இதில் முதல் நாள் ஆட்டத்தில் 69 புள்ளி 6 என்ற விகிதத்தில் ஸ்கோர் செய்தார்.

புனேயில் ஏப்ரல் 4 ம் திகதி முதல் 6ம் திகதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கோல்ப் போட்டியில் மாதவன் பங்குபெற உள்ளார்.