கோஹ்லி மீது கடும் கோபத்தில் சித்தார்த்!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி வெளியிட்ட கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி கூறிய கருத்து தொடர்பில் நடிகர் சித்தார்த் அவருக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில்,

“நீங்கள் இனிமேலும் கிங் கோஹ்லி என்ற அடைமொழியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினீர்கள் என்றால், உங்களுக்கு நீங்கள் பாடம் கற்பித்துக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்றே அர்த்தம்.

எதிர்காலத்தில் இது போன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யோசித்துப் பேசுங்கள்.

இந்திய அணியின் தலைவரிடம் இருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?’ என பதிவிட்டுள்ளார்.