சகோதரியை கொடூரமாக தாக்கி சர்ச்சையில் சிக்கிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரது சகோதரியை தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சகோதரியை தாக்கி அச்சுறுத்தியதாக விதுர விக்ரமநாயக்க மீது பொரளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்பய்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்திருந்தனர்.

எனினும், நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

25,000 ரூபா சரீரப் பிணையின் அடிப்படையில் விதுர விக்ரமநாயக்கவிற்கு பிணை வழங்குவதாக கொழும்பு மேலதிக நீதவான் பிரியன்க லியனகே தெரிவித்துள்ளார்.

விதுர விக்ரமநாயக்கவின் உடன் பிறப்பான சகோதரியே இந்த தாக்குதல் முறைப்பாட்டை செய்துள்ளார் என பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.