சக்கர அடையாள ஆடை அணிந்த இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

பௌத்தர்களின் ‘தர்ம’ சக்கரத்தின் உருவப்படம் கொண்ட ஆடை அணிந்து வீதியில் சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஹசலக பொலிஸாரால் கைது அவர் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

47 வயது முஸ்லிம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இனங்களுக்கிடையே முறுகலைத் தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டாரா என பொலிஸார் விசாரணை நடாத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.