சசிகலாவுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!

தமிழகத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்கப் போவதை எதிர்த்து முதல்வர் ஓ.பி.எஸ் தொகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

ஜெயலலிதா மறைந்து சரியாக 2 மாதம் கழித்து சசிகலா அடுத்த முதல்வராக பதவியேற்கிறார் என்ற அறிவிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பானது தமிழ்நாட்டு மக்களிடம் மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, தற்போது முதல்வராக பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநாயக்கனூரில் உள்ள வெம்பக்கோட்டையில் வசிக்கும் மக்கள் சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குறித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதைப் போல சசிகலா முதல்வராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தவேண்டும் என குறித்த பகுதியில் போராட்டத்தில் குதித்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.