சசிகலாவை சந்திக்கும் தினகரன்: காரணம் இரட்டை இலை விவகாரமோ?

கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்திக்கிறார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை தினகரன் இன்று (புதன்கிழமை) சந்திக்கிறார்

கணவர் நடராஜனை பார்க்க, 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா சென்றார். அதன்பிறகு அவரை உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை.

இன்று மாலை தினகரன் சசிகலாவை சந்திக்க உள்ளார். இதற்காக தினகரன் சென்னையில் இருந்து காரில் நேற்று இரவே பெங்களூரு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.