சட்டவிரோதமாக மாடுகளை எடுத்துச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பக்கியல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக படி ரக சிறிய வாகனத்தில் மாடுகளை கல்முனைப் பிரதேசத்திற்கு எடுத்துச் சென்ற வாகனத்தை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து 8 மாடுகளுடன் ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பக்கியல்ல பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று மாலை படி ரக சிறிய வாகனத்தில் மாடுகளை ஏற்றுவதை பொதுமக்கள் கண்டனர்.

அதனை பின் தொடர்ந்த நிலையில் வீதியில் வைத்து மடக்கி பிடித்த போது ஒரு மாடு மட்டும் கொண்டு போகக்கூடிய இந்த வாகனத்தில் 8 மாடுகள் கால்கள் கட்டப்பட்டு ஏற்றப்பட்டுள்ளதை கண்ட நிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சட்டவிரோதமாக கல்முனை நற்பட்டிமுனை பிரதேசத்திற்கு 8 மாடுகளை கால்கள் கட்டப்பட்டு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும்

கைது செய்யப்பட்டவர் நற்பட்டிமுனையைச் சேர்ந்தவர் உனவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மாடுகள் ஒரு படி ரக சிறிய வாகனம் மீட்கப்பட்டுள்ளது

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழருவி நிருபர் கனகராசா சரவணன்