சட்டவிரோதமாக வெட்டப்பட மரக்குற்றிகள்: பெறுமதி தெரியுமா?

மட்டக்களப்பு கிரான் குடும்பிமலை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 இலச்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை நேற்று சனிக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை மாலை பொலிசார் சோதனையை நடாத்தியபோது மரங்கள் வெட்டப்பட்டு வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் மரக்குற்றிகள் இருந்துள்ளது

அத்துடன் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்கள் தப்பியோடியுள்ள நிலையில் மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழருவி நிருபர் கனகராசா சரவணன்