சந்திக ஹதுருசிங்கவின் சம்பளம் குறித்து வெளியான தகவல் இதோ!-

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிலையான பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை நியமிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவருக்கு மாதாந்த சம்பளமாக 38 அல்லது 39 இலட்சத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது,

தாம் இந்த விடயம் குறித்து சந்திக ஹதுருசிங்கவிடம் கலந்துரையாடியதாகவும், எனினும், அவரது சம்பளம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.