சன்னி லியோனின் பிரமிக்க வைக்கும் புதிய வீடு (வீடியோ)

படுகவர்ச்சி என்றால் அடுத்து நினைவு வருவது நடிகை சன்னி லியோன் தான். தற்போது இந்தியாவிலேயே செட்டில் ஆகியுள்ளார்.

நேற்று விநாயகர் சதுர்த்தியை மக்கள் அனைவரும் விநாயகரை வழிபட்டு கொண்டாடினார். இந்தநிலையில் சன்னி லியோன் மும்பையில் தான் வாங்கியுள்ள புதிய வீட்டுக்கு குடி சென்றுள்ளார்.

“கலாச்சாரப்படி இன்று என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியாது. ஆனால் இன்று புது வீட்டுக்கு வந்துள்ளோம்” என அவர் ஒரு வீடியோ வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சென்ற வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை சன்னி லியோன் மற்றும் அவர் கணவர் டேனியல் வெபர் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.