சமந்தாவை காண வந்த ரசிகர்கள்: பொலிஸ் தடியடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்தாண்டு தனது காதலன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை சமந்தா நேற்று வருகை தந்துள்ளார்.

அப்போது, அவரைக் காணவும், அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

சமந்தா வந்த உடன் பொலிஸ் பாதுகாப்பை மீறி, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், ரசிகர்களை பொலிசார் தடியடி நடத்தி கலைத்தனர்.