சமுத்திரகனி நடிக்க, சீனுராமசாமி இயக்க, இணையும் கூட்டணி!!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்‘தர்மதுரை’.

தற்போது இவர் இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை அடுத்து, சமுத்திரகனியை வைத்து படம் இயக்க இருக்கிறார் சீனுராமசாமி.

இதை நடிகர் சமுத்திரகனி, ‘விரைவில் அடுத்த பரபரப்பு, வெல்வோம்’ என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் சீனுராமசாமி, தனது ட்விட்டர் பதிவில் விரைவில் சகோதரர் சமுத்திரகனி நடிக்க, நான் இயக்க, இணைவதென முடிவானது என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படம் சமூக அக்கறை கொண்ட கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.