சம்பந்தனின் புலம்பல் சரியா? எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து மகிந்த கூறியது இதுதான்!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் புலம்பிக் கொண்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் புலம்பல் சரியா? அல்லது பிழையா? என்பதை அவரின் மனச்சாட்சி தான் சொல்ல வேண்டுமெனக் கூறினார்.

அத்துடன் நாங்கள் அவருடன் முரண்பட விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாடாளுமன்றத்தில் நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே தொடர்ந்து செயற்படுகின்றேன்.

தற்போது எதிரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை நாம் பெற்றுள்ளோம்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்மைத் தேடி வந்தது. யாரிடமும் மண்டியிட்டு இந்தப் பதவியைப் பெறவில்லை எனக் கூறினார்.