சம்பியன் பட்டத்தை தனதாக்கினார் பெட்ரா!

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, செக். குடியரசின் பெட்ரா கிவிடோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சிட்னியில் இன்று (12) நடைபெற்ற இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும், செக். குடியரசின் பெட்ரா கிவிடோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டை 6-1 என ஆஷ்லே பார்டி எளிதாக கைப்பற்றினார். 2 வது செட்டில் மீண்டெழுந்த பெட்ரா கிவிடோவா, இரண்டாவது செட்டை போராடி 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டினை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.

இறுதியில் சிறப்பாக விளையாடிய செக். குடியரசின் பெட்ரா கிவிடோவா, 7-6 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.