சர்கார் சர்ச்சை! முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு? பதற்றத்தில் படகுழு

தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகியது.

வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது.

இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விஜய் மற்றும் முருகதாஸ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.

சமூக நலனை சீர்குலைக்கும் வகையில் இப்படத்தில் பல காட்சிகள் இருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கோரிக்கை படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.