சர்கார் படைத்த சாதனை! இலங்கையில் இமாலய வசூல்

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று பிரமாண்டமாக வெளியான சர்கார் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையிலும் சர்கார் திரைப்படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் ( 1.4 கோடி இந்திய ரூபாய் ) வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் வௌியான ‘மெர்சல்’ முதல் 5 நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.