சர்கார் வசூலை விஸ்வாசம் முதல் நாள் வசூல் முறியடித்ததா?

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் நேற்று திரைக்கு வந்தது.

முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வாசம் படம் 26.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் நேற்றே வெற்றி விழாவை கொண்டாடிய தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை வசூல் பற்றி எந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

விஜய்யின் சர்கார் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 31.2 கோடி ரூபாய் வசூலித்தது.

சர்காரை விட விஸ்வாசம் வசூல் குறைவு தான் என்றாலும், விஸ்வாசம் வேலை நாளில் வெளிவந்துள்ளது என்கிறார்கள் பலர்.