சர்ச்சையில் சிக்கிய விராட் கோஹ்லி!

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறிய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு விராட் கூறியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது.

“ரசிகர் ஒருவர் தனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை காணவே பிடிக்கும் என கூறியிருந்தார்.

இதனைப் பார்த்த கோஹ்லி, அந்த ரசிகரை இந்தியாவில் வாழக் கூடாது என்றும், மற்ற நாடுகளை நேசித்தால் எதற்கு நம் நாட்டில் இருக்கிறாய்? வேறு நாட்டிற்கு சென்று ஏன் வாழக்கூடாது? உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு என்று பதிலளித்தார்.

கோஹ்லியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருக்கு எதிராக சரமாரியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோஹ்லி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது.