சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் கலக்கிய வீராங்கனை!-

சர்வதேச பனிச்சறுக்கு பெடரேசன் சார்பில் ‘அல்பைன் எட்ஜர் 3200’ கோப்பைக்கான போட்டி நேற்று துருக்கியில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியா சார்பில் மனாலியைச் சேர்ந்த வீராங்கனை அன்சால் தாகூர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சர்வதேச அளவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

இந்த வெற்றி எதிர்பாராத ஒன்று என அன்சால் டுவிட் செய்துள்ளார்.