சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில்  கையெழுத்திட்டுள்ளார்.

எனினும், ஞானசார தேரர் விடுதலை விடுதலை செய்யப்பட்டமை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று அல்லது நாளை சிறையில் இருந்து வெளியேறுவார் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.