சற்று முன்னர் ஞானசார தேரர் விடுதலை!

சிறைத்தண்டனை அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேரரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் உத்தரவு இன்று தமக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.W. தென்னகோன் தெரிவித்தார்.

அதன் பிரகாரம், விடுதலை செய்யப்பட்ட தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 9 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.