சவாலை விரும்புகிறேன்- ஷர்துல் தாகூர் அதிரடி

இந்தியா – இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளமை அறிந்ததே.

இவர்களுக்கு பேக்-அப் பந்து வீச்சாளரான 26 வயதான ஷர்துல் தாகூர் வளர்ந்து வருகிறார். இவர் நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வர் குமார், பும்ரா விளையாடாத நிலையில் அவர்கள் பணியை முன்னிலையில் இருந்து எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறேன் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில்:

‘‘நான் சவாலை விரும்புகிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதை நான் சவாலா எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அணியில் மூத்த வீரர்கள் விளையாடாத நேரத்தில், நான் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ள தயாராகுவேன்.

சீனியர் வீரர்கள் ஓய்வில் இருக்கும்போது, வேகப்பந்து வீச்சிற்கு முன்னிலை வகித்து அணியை நடத்திச் சென்றுள்ளேன் என்றார்.