சவுதிப் பெண்ணுக்கு கனேடிய பிரதமர் வழங்கிய முக்கிய தகவல்!

சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறிய இளம் பெண்ணுக்கு கனேடிய பிரதமர் முக்கிய வாக்குறுதி அளித்துள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல் கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறினார்.

குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்ட அவரை போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த இளம்பெண்ணை சவுதி அரேபியாவுக்கே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கு மறுத்த ரஹப் அவுஸ்திரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார்.

இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபை கனடா அரசுக்கு அடைக்கலம் வழங்குவது தொடர்பில் கோரிக்கை வைத்தது.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் Justin Trudeau வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய தாய்லாந்து அதிகாரிகள் கூடிய விரைவில் அல் கியூனன் கனடா செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.