சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழ்ந்தார்.

இதில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் இந்த சாதனையை வைத்திருந்தார். அவர் 2272 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரோஹித் ஷர்மா 2288 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.