சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு எப்போது? வெளியான தகவல் இதோ

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழா பெப்ரவரி 20 ஆம் திகதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

இவ்விழாவில் அந்நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மற்ற நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில் சாம்சங் முன்னதாக தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பெப்ரவரி 25 ஆம் திகதி பார்சிலோனாவில் தொடங்குகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 சீரிசில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என மூன்று வித அளவுகளில் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அவை அறிமுகம் செய்யப்பட்டதும் தொடங்கிவிடும்.

மேலும் விநியோகம் மார்ச் 8 ஆம் திகதி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.