சாம்சங் கேலக்ஸி நோட் 9: நிர்ணயிக்கப்பட்ட விலை விபரம் இதோ!-

சாம்சங் நிறுவனம் நியூயார்க் நகரில் நேற்று அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்ட நிலையில் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

அதன்படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோர் சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ரூ.4,999 விலையில் வாங்கிட முடியும். இதன் உண்மை விலை ரூ.22,990 என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் (128 ஜிபி மட்டும்) போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

கேலக்ஸி நோட் 9 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மொடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மொடலின் விலை ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் ஆன்லைன் தளத்தில் இன்று (ஓகஸ்டு 10) முதல் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஓகஸ்டு 21 ஆம் திகதி வரை முன்பதிவு செய்யலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ்
ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
மெமரியை நீட்டிக்கும் வசதி
ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
BLE எஸ் பென்
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்