சாளரத்தின் வழியே..!!

கண்கள் மூடாமல்
நானிருக்க
நினைவுகளாய்
என் சாளரத்தின்
வழியே வந்து
ஆட்டிப் படைக்கிறாய்
நீ..!!

அருகில் இருக்கும்
போது என்னருமை
புரியவில்லை உனக்கு..!!

விலகிய பின்
உருகுவாய் நீ
எனக்காக என்ற
நம்பிக்கையில்
மீண்டும் திரும்பியது
சாளரத்தின் வழியே
வந்த நினைவுகள்..!!

-யாழ்ரதி-
இந்தியா