சிக்கன் குருமா

சிக்கன் குருமா செய்யவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை

சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தனியா தூள் – 3 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி
கசகசா – 2 ஸ்பூன்
முந்திரி – 10
பொட்டுக்கடலை – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 3 ஸ்பூன
பட்டை – சிறிது
கிராம்பு – 3
சோம்பு – கால் ஸ்பூன்

செய்முறை

சிக்கனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

தேங்காய், சீரகம் , சோம்பு, முந்திரி, கசகசா, பொட்டுக்கடலையை நைசாக அரைத்துகொள்ளவும்.

வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். வாசனை போனவுடன் உப்பு சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.

சிக்கன் ஓரளவு வதங்கிய பின்னர் அனைத்து தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கி வாசனை போனவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

ஆவி அடங்கிய பின் குக்கரை திறந்து அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான சிக்கன் குருமா ரெடி