சிங்கப்பூர் உணவகம் ஸ்ரீதேவிக்காக செய்தது என்ன தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரீதேவி.

தமிழகத்தில் உள்ள சிவகாசி மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி 1967 ஆம் ஆண்டு துணைவன் திரைப்படம் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, பல படங்கள் நடித்த இவர், ரஜினி, கமல் போன்ற உச்சநட்சத்திரங்களுடன் 80-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

ஸ்ரீதேவி ஒரு திருமணத்திற்காக கணவருடன் பெப்ரவரி 24 ஆம் திகதி துபாய் சென்றார்.

அங்கு இரவு 11.30 மணியளவில் குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில், மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை அறிந்தமே.

பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்ரீதேவியின் இறப்பிற்காக அவர்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், சென்னையில் நேற்று ஸ்ரீதேவிக்காக அடையாறில் உள்ள Hotel Crowne Plaza-வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடிகை ஸ்ரீதேவியின் மீது உள்ள பிரியத்தால் ஒரு உணவகத்தில் ஸ்ரீதேவியின் உருவத்தை பொம்மை வடிவில் அமைத்துள்ளார்கள்.

அந்த பொம்மைக்கு நகைகள் மற்றும் புடவை அணிவித்து வைத்திருக்கிறார்கள்.

தற்போது குறித்த பொம்மையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.