சின்ன கரும்புள்ளிகளால் ஏற்படும் கவலையை விரட்டுங்க!

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தாம் அழகாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். இப்போது அதற்காக நேரத்தையும் ஒதுக்கி அழகு நிலையம் சென்று வருகிறார்கள்.

ஆனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே உங்கள் அழகிற்கு அழகு சேர்க்கலாம்.

சின்ன கரும்புள்ளிகள் உங்கள் முகத்தில் உள்ளதா…? இதை செய்யுங்க

ஒரு தேக்கரண்டி தேனுடன், சிறிதளவு இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து கலக்கவும். அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவவும்.

பின்னர் 5 நிமிடம் கழித்து ஈரமான துண்டு வைத்து எடுக்கவும். இப்படி தொடர்ந்து செய்ய விரைவில் கரும்புள்ளி நீங்கும்.

ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவுடன், ஒரு தேக்கரண்டி தண்ணீரை சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலக்கவும். அந்த பேஸ்டை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவவும். பின்னர் 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

இப்படி செய்தால் கரும்புள்ளிகளை எளிதாக வீட்டிலேயே நீக்கலாம்