சிம்புவுடன் மாத்திரம் கூடாது! நயன்தாராவுக்கு நிபந்தனை போட்ட விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகளாக காணப்படும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண பந்தத்தில் இணைய தயாராகி வருகின்றனர்.

ஷநயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதற்குள் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நயன் முடிவு செய்திருக்கும் நிலையில், அவரது காதலர் விக்னேஷ் சிவன் நிபந்தனை போட்டுள்ளாராம். அதாவது, நீ யார் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம், ஆனால் சிம்பு கூட மட்டும் நடிக்க கூடாது என கூறியுள்ளாராம்.

காரணம் சிம்பு – நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு நீண்ட ஆண்டுகளாக இருவரும் பேசாமல் இருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள். அப்படத்திற்கு பிறகு இருவரும் எப்போதும் போல நட்பாக பேசி வரும் நிலையில், சிம்பு தனது புது படத்தில் நயனை ஹீரோயினாக நடிக்கவைக்க முயற்சி செய்தார். இது தொடர்பாக நயனிடமும் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த விக்னேஷ் சிவன், நீ யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் சிம்புவுடன் நடிக்க கூடாது, என்று நயனுக்கு தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.